தமிழக சட்டமன்றம் ஒரு அறிவாலயமாக செயல்படுகிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (13:04 IST)
தமிழக சட்டமன்றம் தற்போது அண்ணா அறிவாலயம் போல் செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 
 
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி இயங்கவில்லை என்றும் ஜனநாயக படுகொலை அரங்கேற்றி வருகிறது என்றும் கூறினார்
 
காலங்காலமாக கடைபிடித்து வரும் மரபுகளில் சட்ட விதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தை பொறுத்தவரை ஒரு அண்ணா அறிவாலயம் ஆக அதாவது திமுக தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது 
 
எனவே மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் பேரவையின் கண்ணியத்தை காப்பாற்றவும் ஜனநாயகப் படுகொலையை அரங்கேறாமலும் சட்டமன்றம் நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என்பதே எங்களது வேண்டுகோள் என்று ஜெயகுமார் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்