அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன..? – சட்டசபையில் காரச்சார விவாதம்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (16:18 IST)
அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து சட்டசபையில் காரச்சார விவாதம் நடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியிலிருந்து பல பகுதிகளில் குறைந்த விலையில் உணவளிக்க கூடிய அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் அம்மா உணவகங்கள் பல பகுதிகளில் சரிவர செயல்படுவதில்லை என புகார்கள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து சட்டமன்ற விவாதத்தில் பேசிய எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் “அம்மா உணவகங்களை மூடினால் அதற்கான தண்டனையை திமுக அனுபவிக்கும்” என பேசியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் ”திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு மூடியது. நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு?” என கேள்வி எழுப்பினார். இந்த விவாதத்தால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்