சாதி பெயரை சொல்லி திட்டிய ஆசிரியர் .. மாணவி ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (18:42 IST)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை அருகே உள்ள குறிச்ச்சி கிராமத்தில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகள் கவுசல்யா (23). இவர் கும்பகோணம் அரசின் கல்லூரியில் எம்.பிஎல். பட்டப்பிடிப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில் தனது ஆய்வுக்கட்டுரையை பேராசிரியர் ரவிச்சந்திரன் என்பவரிடம் சமர்பித்துள்ளார் கவுசல்யா. ஆனால் பேராசிரியர் இதை ஏற்றுக்கொள்ளாமல் மாணவியை அலைக்கழித்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் மாணவி கவுசல்யா இதுகுறித்து பேராசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த பேராசிரியர் மாணவியை கடுமையாக பேசி, சாதிரீதியாகவும் திட்டியதாக தெரிகிறது.
 
இதனால் மனமுடைந்த மாணவி கவுசல்யா நேற்று கல்லூரி ஆய்வகத்தில் இருந்த உயிருக்கு ஆபத்தான ஆசிட்டை குடித்துவிட்டு மயஙி விழுந்துவிட்டார். அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்