ஆசிய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள்: விஜய் 15 வது இடம்

சனி, 17 டிசம்பர் 2022 (16:24 IST)
ஆசிய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில்  விஜய் 15 வது இடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் நிறைவின் போது, அந்த ஆண்டின் ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்கள், சாதனை படைத்தவர்களின் பட்டியல் வெளியாகி அத்துறை சார்ந்தவர்களுக்கு உற்சாகத்தைத் தரும். ரசிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியைத் தரும்.

அந்த வகையில், இந்த ஆண்டில் ஆசிய அளவில் கூகுள் இணையதளத்தில் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் பிடிஎஸ் இசைக்குழுவின் பிரசித்தி பெற்ற பாடகரும் கம்போசருமான ’வி’ முதலிடம் பிடித்துள்ளார்.

ALSO READ: நம்பர் ஒன் நடிகர் அஜித்தும் இல்லை விஜய்யும் இல்லை: திருப்பூர் சுப்பிரமணியன்
 
இப்பட்டியலில், கிரிக்கெட் வீரார் விராட் கோலி 3 வது இடத்திலும்,  பாலிவுட் நடிகை கத்ரினா 4 வது இடத்திலும்,  நடிகர் விஜய் 15 வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

இது, விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்