கரூரில் தவெக பிரச்சாரத்தில் நடந்த கூட்ட நெரிசலை கண்டித்து விஜய்யை கைது செய்ய வேண்டுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடந்த நிலையில், விஜய்யை காண ஏராளமான மக்கள் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலர் பரிதாபமாக பலியானார்கள். இதுவரை 41 பேர் பலியாகியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிரச்சாரத்திற்கு விஜய் காலம் தாழ்த்தி வந்தது, கட்சியினரின் போதிய ஆதரவு இல்லாமை போன்றவை இந்த பலிகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் விஜய்யை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு மாணவர் சங்கம் நாமக்கலில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் “தமிழக அரசே! 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்ற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய்” என வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.
Edit by Prasanth.K