ரஜினி பாஜகவில் இணைவார் என தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில் அந்த கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்து பேசிய ரஜினிகாந்த் ”திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயல்கிறார்கள். மதம் சார்ந்த அரசியல் செய்ய நான் வரவில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த திடமான கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் பாஜகவின் பி அணி என்ற கூற்றை கமல் உடைத்தது போல, இன்று ரஜினி மீதான பாஜக பிம்பத்தை ரஜினியே உடைத்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.