கீழடியில் 22 குழிகளை பார்க்க அனுமதியில்லை: தொல்லியல் துறை

வியாழன், 3 அக்டோபர் 2019 (21:46 IST)
கீழடியில் தோண்ட தோண்ட அதிசயமாக பல பொருட்கள் கிடைத்து வருவதால் கடந்த சில வாரங்களாக அந்த பகுதி சுற்றுலாப்பகுதியாக மாறிவிட்டது. தொல்லியல் துறை அனுமதி பெற்று கீழடியை பார்க்க பலர் குவிந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அரசியல் தலைவர்களும், தமிழார்வர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் கீழடியை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட பலர் கீழடிக்கு சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கீழடியில் 32 குழிகளை பார்க்க மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி என்றும், மீதியுள்ள 22 குழிகளை பார்க்க அனுமதியில்லை என்றும் தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மேலும்  பள்ளி, கல்லூரிகளிலிருந்து பார்வையிட வந்தால், அனுமதி கடிதம் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், குழிகளுக்கு மிக அருகில் யாரும் செல்லக்கூடாது என்றும் தொல்லியல் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்