இந்த நிலையில் தற்போது AUTONOMOUS என்ற ஒரே ஒரு வார்த்தையை பதிவு செய்து இதற்கு கேம்பிரிட்ஜ் டிக்ஸ்னரியில் 'எந்தவொரு முடிவையும் சொந்தமாகவும், சுதந்திரமாகவும் எடுக்கும் அதிகாரம்' என்று அர்த்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட் செய்துள்ளார். இந்த டுவீட் பலரை யோசிக்க வைத்துள்ளது.
தமிழகத்தை ஆட்சி செய்து வருபவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சொந்தமாக சிந்தித்து முடிவை எடுக்காமல், மத்திய அரசு கூறி வருவதற்கு தலையாட்டி வருவதை மறைமுகமாக ஏ.ஆர்.ரஹ்மான் சுட்டிக்காட்டி வருவதாக டுவிட்டர் பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர்.
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை எந்த ஒரு சர்ச்சைக்குரிய பதிவையும் தனது டுவிட்டரில் அவர் பதிவு செய்ததே இல்லை. எனவே இதுவும் அரசியல் குறித்து இருக்காது, அவர் சொல்ல வருவது வேறு என்றும் ஒருசிலர் கருத்து கூறி வருகின்றனர்.