ஜெ. சிகிச்சை குறித்த தகவலை தாக்கல் செய்யும் அப்போலோ: உண்மைகள் வெளிவருமா?

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (16:10 IST)
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக உள்ளதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


 

 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு ஜெயலலிதாவின் மரணம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையும், மருத்துவ சிகிச்சை குறித்த தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது
 
இதையடுத்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அப்போலோ மருத்துவமனை முன்வந்துள்ளது. சீலிடப்பட்ட கவரில் இந்த விவரம் சமர்ப்பிக்கப்படும். இதை நீதிபதி மட்டுமே பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விரைவில் வெளிவரும். இதனால் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கப்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்