நேற்று அதிமுகவில் இருந்தபடி சசிக்கலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 15 பிரமுகர்களை அதிமுக நீக்கிய நிலையில் மீண்டும் சசிக்கலா பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்கட்சியாக நீடிக்கும் நிலையில், அதிமுகவை மீட்பதாக தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் சசிக்கலா பேசுவதாக வெளியாகி வரும் ஆடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிக்கலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுகவினர் களையெடுக்கப்படுவார்கள் என கூட்டறிக்கை விட்ட ஈபிஎஸ் – ஓபிஎஸ், அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் எம்.பி சின்னசாமி உள்ளிட்ட 15 பேரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் திருநெல்வேலி அதிமுக தொண்டர் ஒருவருடன் சசிக்கலா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தன்னுடன் தொலைபேசியில் பேசியதற்காக கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்தவர்களை ஈபிஎஸ் – ஓபிஎஸ் நீக்கியுள்ளது வருத்தமளிப்பதாக கூறியுள்ள அவர். அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து தன் பக்கம் இருப்பதால் விரைவில் அதிமுகவை தான் மீட்பதாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.