டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன்.. அண்ணாமலை அதிரடி பேட்டி..!

Mahendran

வியாழன், 18 செப்டம்பர் 2025 (17:20 IST)
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இது குறித்து பேசிய அண்ணாமலை, இன்னும் சில நாட்களில் டி.டி.வி. தினகரனை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
 
பாஜக கஷ்டமான சூழலில் இருந்தபோது டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளித்தனர். அரசியலை தாண்டி அவர்களுடன் தனிப்பட்ட நட்பு தொடரும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
 
நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து கேட்டபோது, "அவருக்கு கூட்டம் கூடினால் சந்தோஷம்தான், ஆனால் அவரது தொண்டர்கள் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
 
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை காப்பாற்றியது பாஜகதான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "அது சரித்திர உண்மை" என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்