கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அதே தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது எப்படி என பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று காலை ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆலந்து தொகுதியில் 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த அனுராக் தாக்குர், “ராகுல் பேசியது ஹைட்ரஜன் குண்டு என்றால், அந்த குண்டை அவரே தன் மீது போட்டுக்கொண்டார்” என்று தெரிவித்தார்.
மேலும், ஆலந்து தொகுதியில் நடந்த வாக்காளர் நீக்க முயற்சிகளை ராகுல் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அதே தொகுதியில் நடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தான் வெற்றி பெற்றார். அப்படியானால், ராகுல் குறிப்பிடும் 'வாக்குத் திருட்டு' மூலம் தான் காங்கிரஸ் அங்கு வெற்றி பெற்றதா?” என அனுராக் தாக்குர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.