இன்று செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை, டிஆர் குறித்து மேலும் சில விவரங்களை தெரிவிக்க இருப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி பிடிஆர் ஆடியோவின் முழு வடிவம் தன்னிடம் இருப்பதாகவும் ஆனால் அதை வெளியிட்டால் பிடிஆர் தான் பகடைக்காயாக பயன்படுத்தப்படுவார் என்பதால் தான் வெளியிடவில்லை என்றும் ஒருவேளை பிடிஆர் ஆடியோ குறித்த வழக்கு என் மீது தொடுக்கப்பட்டால் அந்த முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் DMKI Files இரண்டாம் பாகம் ஜூலை முதல் வாரம் வெளியாகும் என்றும் முதல் பாகத்தில் 12 நபர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டது போல் இரண்டாம் பாகத்தில் 21 நபர்களின் சொத்து பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதனை அடுத்து DMK Files மூன்றாம் பாகமும் வெளியிட உள்ளேன் என்றும் அண்ணாமலை கூறினார்.