கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

Mahendran
திங்கள், 8 ஜூலை 2024 (19:32 IST)
கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது என்றும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சரியாகயில்லை என்றும், பகுஜன் சமாஜ் கட்சி  மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டு காவல்துறைக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், அவர்களை வைத்து இந்த வழக்கை விசாரணைஅனுமதிக்க கூடாது. காவல்துறையில் 90% வேலைகளை செய்து கான்ஸ்டபிள் போன்றோர் தான் செய்கிறார்கள். மேல் அதிகாரிகளை மாற்றினால் என்ன அர்த்தம். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு முறையான நியாயம் கிடைக்க வேண்டும். 
 
கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சரியாகயில்லை. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சரணடைந்தவர்கள் முக்கியமல்ல, இந்த படுகொலை சம்பவத்திற்கு மூளையாக இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே இந்த வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும் உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் எதிர் கட்சி அரசியல் தலைவர்கள் கூறிவரும் நிலையில் அண்ணாமலையும் இதே கருத்தை இன்றைய போட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்தால் சரியாக இருக்காது என்றும் சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்