அண்ணா பல்கலை புதிய துணைவேந்தர் தமிழர்: கவர்னருக்கு கோரிக்கை

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (21:24 IST)
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக செயல்பட்ட சூரப்பா சமீபத்தில் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த பணிக்கான நேர்காணல் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பதவிக்காக 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 10 பேர்களை நேர்காணலுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் துணைவேந்தர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு தமிழரை திறமையான நேர்மையான கல்வியாளர்கள் துணைவேந்தராக தேர்வு செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்