தமிழக ஆளுனரை சந்தித்த சூரப்பா! விசாரணை ஆணையம் குறித்து முறையீடு என தகவல்

புதன், 9 டிசம்பர் 2020 (13:57 IST)
தமிழக ஆளுனரை சந்தித்த சூரப்பா!
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது
 
இந்த ஆணையம் தனது விசாரணையை தொடங்கி விட்ட நிலையில் சூரப்பா மீது விசாரணை ஆணையம் அமைத்து தவறு என்றும் அந்த ஆணையம் வாபஸ் பெற வேண்டும் என்றும் சமீபத்தில் தமிழக கவர்னர் கூறியதாக செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
தன் மீது விசாரணை கமிஷன் அமைப்பது குறித்து முறையீடு செய்வதற்காக தமிழக ஆளுநரை சூரப்பா சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்