கல்வி சான்றிதழ்களுக்கு ஜிஎஸ்டி: இவர்களுக்கெல்லாம் கிடையாது என விளக்கம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (15:38 IST)
அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி சான்றிதழ் பெறும் போது 18% ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் படிக்கும் போது எந்த சான்றிதழ் கேட்டாலும் அதற்கு ஜிஎஸ்டி வசூல் வசூலிக்கப்பட மாட்டாது 
 
ஆனால் அதே நேரத்தில் படித்து முடித்து அவர்கள் வெளியே சென்ற பிறகு கேட்கும் சான்றிதழுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும் என்றும் இது வருடத்திற்கு சுமார் 20,000 பேர்கள் மட்டுமே இது போன்ற சான்றித்ழ் கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள் என்றும் அவர்களிடம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்