அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள் - பெற்றோர்..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (12:51 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு 150 ரூபாய் பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு ஒன்பது தாள் எழுத வேண்டிய நிலை உள்ளதால் ஒரு செமஸ்டர் 2050 ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் டிகிரி சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு இதுவரை 600 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டணம் தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்