அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடி : அலுவலர் உமா சஸ்பெண்ட்

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (12:31 IST)
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கடந்த 2017ம் ஆண்டு தேர்வு எழுதிய போது அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
 
அதாவது, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாடு அதிகாரியும், தற்போதையை ஐ.டி.துறை பேராசிரியையுமான உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
அதேபோல், இன்று மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற சிலரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையும் நடத்தினர். அதில், முறைகேடு நடைபெற்றது உறுதியானது. 
 
இந்நிலையில், முன்னாள் தேர்வுகட்டுப்பாட்டாளர் உமா தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்