அண்ணா பல்கலைக்கழகம்: பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

வெள்ளி, 25 மே 2018 (16:50 IST)
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேலும் 3 நாடகள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


 
தூத்துகுடி கலவரத்தை முன்னிட்டு தமிழக உள்துறை தூத்துகுடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையத்தை முடக்க அரசு உத்தரவிட்டது.
 
இதனால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் ஆன்லைனில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாது நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இந்த ஆண்டு முதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இணையம் முடக்கப்பட்டுள்ளதால் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு  பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேலும் 3 நாடகள் அவகாசம் நீடித்துள்ளது. அதனால் மே 30ம் தேதி வரை இருந்த அவகாசம் ஜுன் 2 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்