அடுத்தடுத்த நாட்களில் சூதாட்ட தற்கொலை: அரசுக்கு அன்புமணி முக்கிய கோரிக்கை

புதன், 8 ஜூன் 2022 (17:28 IST)
அடுத்தடுத்த நாட்களில் சூதாட்ட தற்கொலை நடந்துள்ளதை அடுத்து தமிழக அரசுக்கு அன்புமணி முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 
 
கரூர் மாவட்டம் தாந்தோனிமலையைச் சேர்ந்த சஞ்சய் என்ற 23வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் தினமும் நடக்கும் நிகழ்வுகளாக மாறி வருகின்றன.  சென்னையில் பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதற்கு அடுத்த நாளே கரூர் மாவட்டத்தில் அடுத்த தற்கொலை நிகழ்ந்துள்ளது.
 
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 10 மாதங்களில் நடக்கும் 23-ஆவது தற்கொலை இதுவாகும்.  இது தொடர்கதையாக அனுமதிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்!
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்