திமுகவின் நடவடிக்கையை முழு மனதாக வரவேற்பதாக அன்புமணி அறிவிப்பு!

திங்கள், 25 நவம்பர் 2019 (07:31 IST)
திமுகவுக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக, தற்போது திமுகவின் நடவடிக்கை ஒன்றை முழுமனதுடன் வரவேற்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து பரபரப்பான நடவடிக்கைகள் இருதரப்பிலும் எடுக்கப்பட்டு வருகின்றன 
 
சமீபத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேரடியாக முரசொலி அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுகவின் ஆர்எஸ் பாரதி அவர்கள் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் மீது ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்திருந்தார்
 
அதுமட்டுமின்றி இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் டாக்டர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுகவின் இந்த நடவடிக்கையை தான் வரவேற்பதாக பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: திமுக-வின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். காரணம், அவதூறு வழக்கை நீதிமன்றத்தில்தான் தொடுக்க வேண்டும். அப்படி நீதிமன்றத்தில் இவர்கள் வழக்கு தொடர்ந்தால், முரசொலி குறித்தான உண்மையான பத்திரம் வெளியே வரும். எனவே, திமுக-வின் நடவடிக்கையை நாங்கள் முழு மனதோடு வரவேற்கின்றோம்,” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்