ஓசி பிரியாணியையடுத்து ஓசி பீர் - திமுகவிற்கு போட்டியாக களமிறங்கிய அமமுக பிரமுகர்

வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:49 IST)
தஞ்சாவூரில் அமமுக பிரமுகர் ஒருவர் டாஸ்மாக் ஊழியரை ஓசி பீர் கேட்டு இரும்பு ராடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி யுவராஜ் ஓசி பிரியாணிக்காக பிரியாணிக் கடை ஊழியர்களை அடித்து துவம்சம் செய்தார். இது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து புரோட்டா சண்டை, பியூட்டி பார்லர் சண்டை என அடுக்கடுக்காய் திமுக நிர்வாகிகள் அட்டுழியம் செய்து வந்தனர்.
நீங்கள் மட்டும் தான் இப்படி செய்வீர்களா? நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல..என அமமுக பிரமுகர் ஒருவர்  திமுகவிற்கு போட்டியாக களமிறங்கியுள்ளார்.
 
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியின் அமமுக ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, தொண்டராபட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி ஓசியில் குடித்து வந்துள்ளார். மேலும் மாதந்தோறும் தனக்கு 10,000 கப்பம் கட்ட வேண்டும் எனவும் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
 
இதற்கிடையே நேற்றும் வழக்கம்போல் யுவராஜ் டாஸ்மாக்கிற்கு சென்று கடை மேலாளர் லட்சுமணனிடம் ஓசி பீர் கேட்டுள்ளார். இனி ஓசியாக எல்லாம் பீர் தர முடியாது என கடையின் மேலாளர் கட் அண்ட் ரைட்டாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி, சில அல்லக்கைகளுடன் டாஸ்மாக்கிற்கு சென்று கடையின் மேலாளரை இரும்புக் கம்பியல் தாக்கியுள்ளார். மேலும் கடையை முழுவதுமாக அடித்து நொறுக்கியுள்ளார்.
 
இதனையடுத்து படுகாயமடைந்த லட்சுமணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் ஆசைத் தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்சியின் பெயரைக் கூறிக் கொண்டு இவ்வாறு அட்டுழியம் செய்யும் ஃப்ராடுகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என காவல் துறையிடம் மக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்