எங்கள் உடலில் ஓடுவது திமுக எதிர்ப்பு ரத்தம்: டிடிவி தினகரன்

திங்கள், 6 மே 2019 (06:49 IST)
டிடிவி தினகரன் ஆதரவு மூன்று எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் திமுகவும், அமமுகவும் ரகசிய கூட்டு வைத்துள்ளதாக ஆளும் அதிமுக தலைவர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியபோது, 'எங்கள் உடலில் ஓடுவது திமுக எதிர்ப்பு ரத்தம் என்றும், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் திமுகவுடன் சமரசம் செய்யமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமமுகவும், திமுகவும் கூட்டு என அதிமுகவினர் பொய் பரப்புரை செய்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
 
2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சியை நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்றும், ஆனால் மே 23ஆம் தேதிக்கு பின்னர் மோடியே வீட்டுக்கு போய்விடுவார் என்பதால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். 
 
டிடிவி தினகரன் இவ்வாறு கூறினாலும், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்தால் திமுகவின் இந்த தீர்மானத்திற்கு டிடிவி தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஆதரவு அளிபபர்கள் என்றே கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்