மகாபாரதத்தில் அதிமுக, திமுக, அமமுக: ஜெயகுமாரின் பலே ஒப்பீடு!!

சனி, 4 மே 2019 (10:05 IST)
அதிமுக அமைச்சர் ஜெயகுமார் மகாபாரத கதையில் பாத்திரங்களோடு அதிமுக, திமுக, அமமுகவை ஓப்பிட்டு பேசியுள்ளார். 
 
முதலவர் எடப்பாடி பழனிச்சாமி துரைமுருகன் வீட்டில் நடந்து வருமான வரி சோதனை குறித்து தவறான செய்தியை தெரிவித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 
 
இது குறித்து அதிமுக மீன்வளத்துரை அமைச்சர் ஜெயகுமார் கேட்ட போது அவர் பதிலளித்தது பின்வருமாறு, கொள்கை, லட்சியம் கொண்டவர்களிடம் முரண்பாடு இருக்கவே இருக்காது. அமமுக, திமுக இடையே குழப்பம் உள்ளது. ஆனால் எங்களிடம் எந்த குழப்பமும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கை வழியில் நடப்பதால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
திமுக சகுனியாக இருந்து சூழ்ச்சி வேலை செய்வது வழக்கமான ஒன்றுதான். அதிமுகவினர் பாண்டவர்கள் என்பதால் எங்களுக்கு சூழ்ச்சி ஏதும் தெரியாது. அமமுக துரியோதனன் போன்றவர்கள். தற்போது இந்த துரியோதன கும்பலும் சகுனி கும்பலும் சேர்ந்து கொண்டுள்ளனர். 
 
இருப்பினும் பாண்டவர்களான எங்களை ஒன்றும் செய்யவே முடியாது. பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவர். சோதனையின் போது கைப்பற்றப்பட்டது துரைமுருகனுக்கு சொந்தமான பணம்தான். ஆனால், அவர் கூறுவது குப்புற விழுந்து விட்டு அப்பறம் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்