எடப்பாடி மீண்டும் முதல்வரானால் தூக்கில் தொங்க தயார்: செந்தில் பாலாஜி

திங்கள், 9 ஜூலை 2018 (08:34 IST)
கோவையில் நேற்று டிடிவி தினகரன் கட்சியான அமமுக கட்சியின் சார்பாக பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், 'எம்ஜிஆர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகியால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவினால்தான் இந்த ஆட்சி காப்பாற்றப்பட்டது. அவரால் மட்டுஏம் இந்த ஆட்சி தொடர்ந்து வருகிறது. ஜெயலலிதா கூட எடப்பாடி பழனிசாமியை அமைச்சராகத்தான் ஆக்கினார். சசிகலா அவருக்கு முதல்வர் பொறுப்பை வழங்கினார். ஆனால் தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கினார். ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது  என்று முதல்வர் பழனிசாமி கூறுகிறார். ஆனால், இந்த ஒரு தினகரனையே ஆர்.கே.நகரில் எதிர்கொள்ள முடியவில்லை' என்று பேசினார்
 
இதே கூட்டத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, '“பாஜகவை எதிர்க்க கூடிய தைரியம் அமமுக துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரனுக்கு மட்டும் தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் எம்எல்ஏ கூட்டத்தை கூட்டி முதல்வர் ஆகிவிட்டார் என்றால் இதே மேடையில் தூக்கிட்டு தொங்குகிறேன்' என்று செந்தில் பாலாஜி ஆவேசமாக பேசினார்.
 
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது: துணை முதல்வர் பதவிக்காக எடப்பாடி அணியுடன் இணைந்த ஓ.பன்னீர் செல்வத்தின் தற்போதை நிலை என்னவென்று அனைவருக்கும் தெரியும். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஆகஸ்ட் மாதம் நல்ல தீர்ப்பு வரும், அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்