அமெரிக்காவில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல்: அதிர்ச்சி தகவல்
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (16:50 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தொற்று பரவி வரும் நிலையில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய 41 வயது பெண் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து பழனிக்கு திரும்பிய 41 வயது பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு சோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது