ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இயக்குனர் அமீர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது என்பதும் இதில் காளைகளை அடக்கும் காளையர்களுக்கு பல்வேறு பரிசுகள் தரப்படுகிறது என்பதும் குறிப்பாக விலை உயர்ந்த கார்கள் பரிசளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு வீரர்கள் நாங்கள் கார்களை வைத்து என்ன செய்யப் போகிறோம், அதற்கு பதிலாக எங்களுக்கு அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை எழுப்பினர்.
இந்த நிலையில் இதே கோரிக்கையை இயக்குனர் அமீர் வைத்துள்ளார். தமிழ்நாடு அரசு பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்க வேண்டும் என்றும் அவ்வாறு சேர்த்தால் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார்
மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.