அழகிரி கப்சிப்: ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்க ப்ளானிங்கா...?

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (12:49 IST)
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்பட 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜனவரி 2 ஆம் தேதி காலை 10 மணி முதல் 3 ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
 
ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25,000. வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் திமுகவில் இணைய நினைத்த அழகிரி தேர்தல் அறிவிப்பு வந்தும் எதும் பேசாமல் இருப்பது அவர் மீதான கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு முன்னர் திருவாரூரில் அழகிரி போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
தற்போது கப்சிப் என்று இருக்கும் அழகிரி ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஏதேனும் செய்யப்போகிறாரா என்ற வகையில் எதிர்பார்ப்புகள் தோன்றியுள்ளது. அனால், மக்களோ கருணாநிதியை அடுத்து ஸ்டாலினையே தலைவராக நினைப்பதால் ஸ்டாலின் கையில்தான் உள்ளது தேர்தல் குறித்த நிலைபாடுகள். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்