மகனோடு கருணாநிதியை சந்தித்த அழகிரி - நடந்தது என்ன?

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (14:14 IST)
திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் அழகிரி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.


 

 
திமுக-வில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கி விட்டதால், அரசியல் மற்றும் திமுகவை விட்டு அழகிரி சற்று தள்ளியே இருக்கிறார். கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டசபையில் அவர் அடியெடுத்து வைத்த நாளை வைரவிழா கொண்டாட்டம் என்கிற பெயரில் திமுக கொண்டாடியது. அதில் கூட அழகிரி பங்கேற்கவில்லை. 
 
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது கொள்ளுப்பேரன் மனோரஞ்சித் மற்றும் விக்ரம் மகள் அக்ஷிதா திருமணத்தை தனது கோபாலபுரம் வீட்டில் நடத்தி வைத்தார். இதில், அழகிரியும் அவரது மகன் தயாநிதியும் கலந்து கொண்டனர். 
 
அப்போது தந்தை கருணாநிதியை அழகிரி சந்தித்து உடல் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்