மீண்டும் ரத்தாகும் விமான சேவைகள்! – கடுப்பான பயணிகள்!

திங்கள், 25 மே 2020 (10:32 IST)
நீண்ட நாட்கள் கழித்து விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில் பயணிகள் அதிகமில்லாததால் விமான சேவைகள் சில ரத்து செய்யப்படுவது முன்பதிவு செய்தவர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோன தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவையை தொடங்குமாறு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். எனினும் இன்று முதல் விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கு நிபந்தனைகள் சிலவற்றை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு வழித்தடங்களில் செயல்படும் விமானங்களில் குறைவான பயணிகளே முன்பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவ்வாறாக குறைவான பயணிகள் உள்ள விமானங்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு புக்கிங் செய்தவர்கள் அந்த பணமும் உடனடியாக கிடைக்க வழியில்லை என்று புலம்பி வருகின்றனர்.

இன்று இந்தியா முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்வதற்கான விமானத்தில் 38 பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்க இருந்த உள்ளூர் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்