பாஜக அரசின் துரோகங்களுக்கு அதிமுக துணைபோனது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinoj

வெள்ளி, 22 மார்ச் 2024 (20:26 IST)
தமிழ் நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசுவது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக, காங்கிரஸ், திமுக  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இந்தியா கூட்டணியில் திமுக  இடம்பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக கூட்டணி தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார்.
 
திருச்சி திமுக கூட்டனி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
 
திருச்சி என்றாலே திமுகதான், திருச்சியில் தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைத்தான். திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை; கடும் நிதி நெருக்கடியில் கூட திமுக அரசு, 3 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் கூட தர மறுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தமிழ் நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசுவது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. தமிழ் நாட்டில் இருந்து ரூ.1 வசூலித்துவிட்டு ரூ.25 பைசா திருப்பி தருவது நியாயமா?  தமிழ் நாட்டிற்கு எதுவும் செய்யாமல், தமிழ்மொழி தான் முத்த மொழி என பிதரமர் மோடி நீலி கண்ணீர் வடிக்கிறார். பாஜக அரசு செய்த துரோகங்களுக்கு அதிமுக துணைபோனது என்று பேசினார்.
 
மேலும், தமிழ் நாட்டு மக்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்