அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக முடிந்தது. இதனை அடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலும், பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார்.