இதன்மூலம், ஏழை எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர் உள்ளிட்ட பலரும் குறைந்த விலையில் அம்மா உணவகத்தில் வந்து உணவு சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சியில் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்குகின்றன. இதில், 3000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்தாண்டு அம்மா உணவகத்தின் பணியாளர்கள், ஊதியம், அரசின் பருப்பு, காய்கறி ஆகியவற்றின் கொள்முதல் என சுமார் ரூ.120 கோடி செலவு என்றும், ரூ.14 கோடி வரவு என்று கூறியுள்ளார்.
மேலும், அம்மா உணவகங்கள் மூடப்படவுள்ளதாக வதந்தி பரவிய நிலையில், சென்னையில் அம்மா உணவகங்களுக்கு பட்ஜெட்டில் 2 மடங்கு நிதி( ரூ.9.65) இதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.