ராஜஸ்தானில் தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்: திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்

செவ்வாய், 7 மார்ச் 2023 (08:11 IST)
ராஜஸ்தானில் தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்: திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்
நேற்று ராஜஸ்தானில் தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்டதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.
 
தங்க நகைகள் திருடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற தமிழக போலீசார் லஞ்சம் கேட்டதாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால்  சிறை வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா நிருபர்களிடம் கூறிய போது ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற தமிழக போலீசார் தவறான தகவல் காரணமாக சிறைபிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர் என்றும் இது குறித்து விளக்கம் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். 
 
ராஜஸ்தானுக்கு சென்ற தமிழக போலீசார் தமிழகத்தில் திருடு போன தங்க நகைகளை மீட்க சென்றுள்ளதாகவும் அது குறித்து ராஜஸ்தான் காவல்துறையிடம் விளக்கம் அளித்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் இதில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்