இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தந்தை, மனைவி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வருமான வரித்துறையினர் மீண்டும் அதிரடியாக சோதனையை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த முறை சோதனை நடத்தியபோது பூட்டிக்கிடந்த அறையில் தற்போது சோதனை நடத்தி வருவதாகவும், மேலும் ஏற்கனவே ரெய்டு நடத்தி கைப்பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்த போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரிக்கைகள் வலுத்தது. இந்நிலையில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதால் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் விழிபிதுங்கி நிற்கிறார்.