நேற்று முன்தினமே தொடங்கியிருக்க வேண்டிய சட்டசபை கூட்டம் எதிர்கட்சி பிரமுகர்கள் இறப்புக்கு அஞ்சலி செலுத்திய பின் ஒத்திவைக்கப்பட்டு இன்று தொடங்கியது. தொடர்ந்து சிஏஏ, என்.பி.ஆர் போன்றவற்றிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற சொல்லி சட்டசபையில் கேட்டு வரும் திமுக இன்றும் அதையே வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது.
வெளிநடப்பிற்கான காரணம் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் ”என்.பி.ஆர்-க்கு ஏதிராக இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் என்பிஆர்-க்கு எதிரான தீர்மானம் இயற்ற கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் என்னென்ன தவறான தகவல்களை தந்தார்களோ அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.