குடும்பத் தகராறு : பரோல் முடியும் முன்பே இன்று சிறைக்கு செல்லும் சசிகலா

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (08:36 IST)
கணவர் நடராஜன் மறைவையொட்டி பரோலில் தஞ்சை வந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்கிறார். 
தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால், கடந்த 20ம் தேதி பரோலில் வெளிவந்த சசிகலா தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருந்தார். நடராஜனின் சொத்துக்களை பிரிப்பதில் நடராஜனின் உடன் பிறந்தவர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் சசிகலா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் பரோல் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் சசிகலா, தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை கார் மூலம் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்