துணை முதல்வர் ஓபிஎஸ் அமெரிக்கா பயணம்! ஏன் தெரியுமா?

வெள்ளி, 1 நவம்பர் 2019 (09:30 IST)
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நவம்பர் மாதம் 7ஆம் தேதி அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ள நிலையில் தற்போது துணை முதல்வரும் அமெரிக்கா செல்லவுள்ளார்.
 
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய துணை முதல்வர் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணத்திற்கு பின்னர் தமிழகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தில் பெரும் மாற்றம் இருக்கும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மேலும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அவர்களும் அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்