காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே உறவுநிலை விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு என்.ஐ.ஏ-வால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் அமைப்பான கேடிஎஃப் தலைவரான நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்திய தூதருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரை கனடாவை விட்டு வெளியேற்றியுள்ளது. இந்த சம்பவம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து கனடாவின் தூதர் வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், கனடா விவகாரம் பற்றி வெளிநாடு தமிழர் நலத்துறை அமைச்சார் செஞ்சி மஸ்தான் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளதாகவும், கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.