விரைவில் அதிமுக சசிகலா தலைமையில் இயங்கும்… கார்த்தி சிதம்பரம் கருத்து!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (10:49 IST)
அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் இயங்க முடியாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல விஷயங்களைப் பேசிய அவர் ‘தமிழகம் இப்போது இல்லை என்றாலும் அடுத்த ஆண்டிலாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும். இப்போது நாட்டில் அதிகமாகி வரும் விலைவாசிக்கு ஒன்றிய அரசின் தவறான முடிவேக் காரணம். அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் இயங்க முடியாது. சூழ்நிலைகளைப் பார்க்கும் போது விரைவில் சசிகலா தலைமையில் இயங்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்