இன்று சர்வதேச யோகா தினம்: 40,000 பேர்களுடன் யோகா செய்த பிரதமர் மோடி

வெள்ளி, 21 ஜூன் 2019 (07:51 IST)
கடந்த ஆட்சியில் பிரதமர் மோடியின் முயற்சியால்தான் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. யோகாவின் நன்மையை உணர்ந்து உலகம் முழுவதும் யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியின் பிரபாத்தாரா மைதானத்தில் 40,000 பேருடன் பிரதமர் மோடி யோகாசனம் இன்று காலை யோகாசனம் செய்தார்.
 
முன்னதாக பிரதமர் மோடி 5வது சர்வதேச யோகா தினத்தையொட்டி தொலைக்காட்சியில் பேசியபோது, 'உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா, யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது என்றும், நல்வாழ்வுக்கான திறவுகோல் யோகா என்றும்,  உலக அமைதிக்கு யோகா முக்கிய பங்காற்றுகிறது என்றும், யோகாவின் பலன் அனைத்து ஏழை மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் சர்வதேச யோகா தினத்தில் மட்டும் யோகா செய்யமல் தினந்தோறும் அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும் என மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும் என்று கூறிய பிரதமர் மோடி யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றிணைந்து பரப்ப வேண்டும்  என்றும், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம் என்றும், யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது  என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்