வாய் கிழிய பேசிட்டு; பேனர் வைக்க அனுமதி கோரும் அதிமுக: கடுப்பில் மக்கள்!

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (13:49 IST)
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பேனர்களை வைக்க அனுமதி வேண்டும் என அதிமுக அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 
 
சமீபத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண்  மோட்டார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அவர் மீது அதிமுக பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்தது. பேனர் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
 
இது தொடர்பாக பேனர் வைத்தற்கு காரணமாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீஸார் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து ஜெயகோபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்நிலையில், அதிமுக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக பிராமணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்துள்லது. இந்த பிராமணப் பத்திரத்தில் மோடி வருகையை முன்னிட்டு பேனர் வைக்க அனுமதி கோரியுள்ளது. இது குறித்து விரிவாக கோரப்பட்டிருபதாவது, 
 
வரும் அக்டோபர் 11, 12 ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமரும் வெளிநாடு ஒன்றின் தலைவரும் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காக சென்னைக்கு வரவிருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தருவதால், தமிழக அரசின் சார்பில் அவர்களை வரவேற்று குறிப்பிட்ட இடங்களில் பேனர் வைக்க வேண்டும்.
இந்த பேனர்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தொந்தரவில்லாத வகையில் வைக்கப்படும். சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 16 இடங்களில் வரவேற்பு பேனர்களை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
 
அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இந்த பேனர்கள் வைக்கப்படும். எனவே, இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அதிமுகவின் இந்த கோரிக்கையால் பொது மக்கள் ஆத்திர மடைந்துள்ளனர். 
 
ஏற்கனவே அதிமுக பேனரால்தான் ஒரு உயிர் பரிபோன நிலையில், அதனை பற்றி கவலைபடாமல் மீண்டும் பேனர் வைக்க அனுமதி கேட்பது அரசுக்கு அழகல்ல என விமர்சித்து வருகின்றனர். இதில் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வேறு வெளியிட்டீற்களே என தங்களது ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்