அதிமுக தொண்டர் தலையில் பாஜக தொப்பி - குறியீடு என்ன?

சனி, 24 பிப்ரவரி 2018 (17:06 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். 

 
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் உருவ சிலையும் திறக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது புரட்சி தலைவி அம்மா ’ வும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதோடு, தமிழக அரசு சார்பில் மானிய ஸ்கூட்டி வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசுகிறார்.
 
இந்நிலையில், சென்னை வரும் பிரதமரை வரவேற்க அவர் வரும் வழியில் தொண்டர்களை நியமித்துள்ளது பாஜக தரப்பு. அது அவர்கள் கட்சி. அதில் தவறில்லை. ஆனால், மோடியை வரவேற்க, கையில் அதிமுக கொடி, தலையில் பாஜக தொப்பி அணிந்து ஒரு அதிமுக தொண்டர் நின்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஏற்கனவே அதிமுகவை பாஜகதான் இயக்குகிறது என்ற புகார் எழுந்துள்ள நிலையில், பாஜக தொப்பி அணிந்து அதிமுக தொண்டர் நிற்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்