ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் உருவ சிலையும் திறக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது புரட்சி தலைவி அம்மா ’ வும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் வேலுமணியின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்ட்டரில் ‘ புரட்சி தலைவியே’ என்பதற்கு பதில் ‘ புரட்சி தவைவியே’ என அச்சிடப்பட்டுட்ட விவகாரம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.