ஒருபக்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார இழப்புகளை சரிசெய்தல் என ஆட்சி ரீதியில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை அமைப்பதிலும் அதிமுக ஈடுபாடு காட்டி வருகிறது. இந்த முறை ஸ்டார் நடிகர்கள் உள்ளிட்ட பலட் தமிழக தேர்தலில் பெருவாரியான ஓட்டு விகிதங்களை சரிக்கும் நிலையில் தயாராக இருப்பதால் அதற்கேற்ற நடவடிக்கைகளை இப்போதிருந்தே அனைத்து கட்சிகளும் மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றன.
ஏற்கனவே அதிமுக கட்சி ரீதியான நிர்வாக பணிகளுக்காக 39 மாவட்டங்களாக பிரித்திருந்த நிலையில் தற்போது சேலத்தையும் இரண்டாக பிரித்து நிர்வகிப்பது சரியாக இருக்கும் என ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மூத்த அதிமுக உறுப்பினர்கள் செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாவட்டம்தோறும் ஐடி விங்கை பலப்படுத்தும் பணியிலும் அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.