மதுசூதனன் தலைமையில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (09:42 IST)
மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.


 
 
முதலமைச்சராக ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடைபெறம் முதல் பொதுக்குழு கூட்டம் ஆகும். எதிர்பார்த்தது போலவே இந்த கூட்டத்தில் சசிகலா பங்கேற்கவில்லை. அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையில் அவைத்தலைவர் மதுசூதனன், மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், பன்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
 
இன்னும் ஒரு மணி நேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
 
மேலும் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் வழக்கமாக அமரும் நாற்காலி பொதுக்குழு நடைபெறும் மேடைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரும் மேடையில் வீற்றிருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்