தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், சென்னை வடபழனி கோவிலில் அங்கப்பிரதட்சனம் செய்து வழிபட்டனர்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் பிரார்த்தனைகளும், பூஜைகளும் செய்து வருகின்றனர். சிறியவர், பெரியவர் பார்க்காமல் அலகு குத்திக் கொண்டனர். கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், மண் சோறு சாப்பிடுதல், பாலபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வடபழனி முருகன் கோவிலில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் 50 பெண்கள் இன்று அங்கப் பிரதட்சனம் செய்து வழிபட்டனர். முதல்வர் விரைவில் நலம் பெறுவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.