அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அவை தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற இருப்பதாக தகவல் வழியாக உள்ளன.
நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக பொது குழு வழக்கு நடந்தபோது ஓ பன்னீர் செல்வம் தரப்பையும் அழைத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அந்த பொதுக்குழுவில் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அவைத்தலைவர் முன்மொழிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவிப்பதாக அவை தலைவர் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் கூட இருக்கும் பொதுக்குழுவிலும் இதனை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதனை எடுத்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற வேண்டும் என பாஜக அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதிலும் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது.