உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக பார்வட் பிளாக் இடையே மோதல் வெடித்தது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் நீதிபதி, வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, அருகே இருந்த தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றார்.
ஆனால், அவர்களுக்கு முன்பாக, வேட்புமனு தாக்கல் செய்த பார்வட் பிளாக் கட்சியினர், தாங்கள் தான் முதலில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்போம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, தேவர் சிலைக்கு பார்வர்ட் பிளாக் கட்சியினர் பூட்டு போட்டனர்.
தேவர் சிலைக்கு பூட்டு போட்ட பார்வர்ட் பிளாக் நிர்வாகிகளை போலீசார் தேடித்தேடி கைது செய்தனர். இதனால், கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்க்கோரி மதுரை - தேனி நெடுஞ்சாலையில் அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அந்தப் பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த உயர் போலீசார் அதிகாரிகள் போராட்டகாரர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
அதிமுக பார்வட் பிளாக் இடையே மோதல் காரணமாக தென்மாவட்டம் முழுவதும் பெரும் பதட்டம் நீடித்தது.